லண்டன் மறைந்த இங்கிலாந்து இளவரசி டயானா ‘ஷு’க்கள் ரூ.1.5 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டுள்ளன. இங்கிலாந்து இளவரசர் சார்லஸின் மனைவி மறைந்த இளவரசி டயானா. இவர் திருமணம் செய்யும் தொடக்கப்பள்ளி பள்ளி ஆசிரியை ஆக பணிபுரிந்தார். அப்போது அவர் தனது 19-வது வயதில் அணிந்திருந்த வெள்ளை நிற ‘ஷு’க்கள் தற்போது ஏலம் விடப்பட்டன. இங்கிலாந்தில் உள்ள டொமினிக் வின்டர்ஸ் ஏல நிறுவனத்தில் ஏலம் விடப்பட்டது. அவை ரூ.1.5 லட்சத்துக்கு ஏலம் போனது. அந்த ஷுக்கள், 1977-78 காலகட்டத்தில் டயானா தனது நண்பர் ஒருவரின் வீட்டில் விட்டுச் சென்றவை ஆகும். மேலும் பள்ளி ஆசிரியையாக பணியாற்றிய போது டயானா அந்த ஷூக்களை அணிந்துகொண்டு எடுத்த புகைப்படங்கள் இருப்பதாகவும் ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது. இதேபோல் இளவரசர் சார் லஸ், டயானாவை பிரிந்த 2 நாள் கழித்து எழுதிய கடிங்களும் ஏலம் விடப்பட்டன. மேலும் கென்சிங்டன் அரண்மனை குறிப்பேட்டில், தியானம் மற்றும் பிரெஞ்சு தத்துவம் தொடர்பாக இளவரசி டயானா எழுதிய குறிப்பும் ஏலம் விடப்பட்டன. இந்த குறிப்பு 1400 பவுண்டுகளுக்கு (ரூ.1.15 லட்சம்) ஏலம் போனது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்