செர்பிய நாட்டின் பிரதமராக அனா பாபிக் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர், அந்நாட்டில் முதல் பெண் மற்றும் ஓரினச் சேர்க்கை பிரதமர் ஆவார். செர்பிய நாட்டின் அதிபராக, அலெக்சாண்டர் வூசிக் இருந்துவருகிறார். அவர் நேற்று அந்நாட்டின் பிரதமராக அனா பாபிக்கை தேர்ந்தெடுத்துள்ளார். அனா, இங்கிலாந்து நாட்டிலுள்ள ஹல் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றுள்ளார். கடந்தாண்டு அரசியலில் கால் பதித்த அனா, செர்பியாவின் பொது நிர்வாகத் துறை அமைச்சராக இருந்தார். இவர் தன்னை ஓரினச் சேர்க்கையாளராக அறிவித்திருந்தார். செர்பியாவின் முதல் ஓரினச் சேர்க்கை அமைச்சராகவும் இவர்தான் இருந்தார். இவர் தற்போது, செர்பியாவின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். செர்பியா நாட்டின் முதல் பெண் மற்றும் ஓரினச் சேர்கை பிரதமர் அனா பாபிக் தான். கடந்த வாரம் லியோ வரதாகர் என்பவர் அயர்லாந்தின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரும் ஓரினச் சேர்க்கையாளர் என்பது குறிப் பிடத்தக்கது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்