img
img

நாங்கள் பஞ்சாயத்து பண்ண முடியாது!'- காஷ்மீர் விஷயத்தில் ரஷ்யா
வெள்ளி 16 ஜூன் 2017 16:30:20

img

இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையில் நிலவும் காஷ்மீர் பிரச்னையை, அவர்கள்தான் தீர்த்துக் கொள்ள வேண்டும். அதில் ரஷ்யா தலையிடாது' என்று கறார் அறிவிப்பை வெளியிட்டுள்ளது ரஷ்யா. முன்னர் பாகிஸ்தான் ஊடகங்கள், 'பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அதிகாரி நபீஸ் சகாரியா ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து, இந்தியா - பாகிஸ்தான் இடையில் நிலவும் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைக்குமாறு கேட்டுள்ளார். அதற்கான நடவடிக்கைகளை ரஷ்ய தரப்பு விரைவில் எடுக்கும்.' என்று பகீர் செய்தியை வெளியிட்டது. இந்த செய்தி பாகிஸ்தான் ஊடகங்கள் வெளியிட்டாலும், உலக அளவில் அதன் வீச்சு இருந்தது. இந் தியா இது குறித்து ஏதாவது கூறுவதற்கு முன்னர் ரஷ்யா, 'பாகிஸ்தான் ஊடகங்களில் கூறியுள்ளது போல மத்தியஸ்தம் செய்யும் எண்ணம் எங்களுக்கு அறவே இல்லை' என்று மறுப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து ரஷ்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், 'பாகிஸ்தான் மீடியாக்கள் மூலம், இந்தியா - பாகிஸ்தான் இடையில் நிலவி வரும் உறவுச் சிக்கலை தீர்க்க ரஷ்யா முன் வந்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது. முக்கியமாக காஷ்மீர் விவகாரத்தில் ரஷ்யா தலையிட்டு சமாதானம் செய்து வைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ரஷ்யாவுக்கு அதைப் போல எண்ணம் எதுவும் இல்லை என்பதை தெள்ளத் தெளிவாக கூறிக்கொள்ள விரும்புகிறோம். நாங்கள் முன்னர் எடுத்த முடிவும் நிலைப்பாடும் அப்படியே தொடரும். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் உள்ள கருத்து வேறுபாடுகளை அந்த இரு நாடுகள் மட்டுமே பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும்.' என்று விளக்கிவிட்டது. இந்த விஷயம் குறித்து இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் கோபால் பாக்ளே, 'இந்தியா - பாகிஸ்தான் இடையில் சமாதானம் செய்ய நாங்கள் தயார் என்று ரஷ்யா இதுவரை ஒருபோதும் கூறவில்லை. பாகிஸ்தானுடன் இந்தியாவுக்கு நிலவும் பிரச்னையில் மூன்றாவது நபர் தலையீட்டை இந்தியா விரும்பாது என்பது ரஷ்யாவுக்கு நன்றாகத் தெரியும். பாகிஸ்தான் தரப்பில் இருந்து தீவிரவாதம் கைவிடப்பட்டால்தான் இந்தியா பேச்சுவார்த் தைக்கு இணங்கி வரும்' என்று தெளிவாக கூறிவிட்டார்.

பின்செல்

உலகச் செய்திகள்

img
ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்

மேலும்
img
ராணி எலிசபெத் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு

இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது

மேலும்
img
வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்

வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

மேலும்
img
பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை

இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை

மேலும்
img
16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img