சீனாவில் மழலையர் பள்ளி ஒன்றில் நடந்த வெடிவிபத்தில், 7 பேர் பலியாகியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு சீனாவில் இன்று மாலை மழலையர் பள்ளியின் வாசல் பகுதியில் வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 7 பேர் பலியாகியதாகத் தெரியவந்துள்ளது. மேலும், 66 பேர் இவ்விபத்தில் காயமடைந்துள்ளனர். இதையடுத்து காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 9 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. காயமடைந்தவர்களில் சில குழந்தைகளும் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. விபத்து ஏற்பட்டவுடன் காவல் துறையினருக்கு உடனடி தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'விபத்துக்கான காரணம் குறித்து இதுவரை தெரியவில்லை. காவல்துறையினர் தரப்பில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது' என்றார். இதனால் கிழக்கு சீனா பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்