லண்டனில் இன்று அதிகாலை 24 மாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் இறந்துள்ளனர். இந்த தீ விபத்தில் தனது குழந்தை இறந்துவிடக் கூடாது என்று நினைத்த ஒரு தாய், குழந்தையை 9 அல்லது 10-வது மாடியிலிருந்து கீழே தூக்கி போட்டுள்ளதாக சம்பவ இடத்தில் இருந்தவர்கள் கூறு கின்றனர். தூக்கி எறியப்பட்ட குழந்தையை கீழே இருந்த ஒரு நபர் சரியான நேரத்தில் பிடித்ததாகவும் கூடுதல் தகவல் கூறப்படுகிறது. தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள பலர் அடுக்கு மாடி கட்டடத்தில் இருந்து குதித்த சம்பவங்கள் நிறைய நடந்துள்ளதாக இங்கிலாந்து ஊடகங்கள் கூறுகின்றன. லண்டனில் 24 அடுக்குகள் கொண்ட 'கிரென்ஃபெல் டவரில்' நேற்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. லண்டனில் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது, 'கிரென்ஃபெல் டவர்'. 24 மாடிகள் கொண்ட இந்தக் கட்டடத்தில், 100-க்கும் மேலான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தக் கட்டடம் 1947 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த கட்டடத்தில் 120 பிளாட்கள் இருந்ததாகவும், அதில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. சுமார் 600 பேருக்கு மேல் வாழ்ந்து வந்த இந்த கட்டடத்தில், தீ விபத்து காரணமாக இதுவரை 12 பேர் இறந்துள்ளதாக லண்டன் போலீஸ் தரப்பு தகவல் கூறியுள்ளது. இறந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இன்னும் கட்டடத்திலேயே சிக்கி இறந்தவர்கள் பற்றி முழு விபரம் தெரியாத நிலை உள்ளது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. மீட்பு பணிகள் இன்னும் முடிவுறாத நிலையில் லண்டன் போலீஸ் தரப்பு, 'தீ விபத்து என்பதால், மீட்பு பணிகள் சிக்கலாக இருக்கிறது. மீட்பு பணிகள் முடிவு பெற சில நாள்கள் எடுக்கலாம்.' என்று கூறியது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்