அமெரிக்காவின் வர்ஜீனியாவில் உள்ள பேஸ்பால் மைதானத்தில் நேற்று, மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நான்கு பேர் பலியானதாக Reuters செய்தி வெளியிட்டது. குடியரசுக் கட்சியைச் சேர்ந்த லூசியானா பகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்டீவ் ஸ்கேலிஸ், வர்ஜீனியா மாகாணத்தில் பேஸ்பால் விளையாட்டுப் பயிற் சியில் ஈடுபட்டிருந்தார். அவருடன் அவரது உதவியாளர்களும் பயிற்சி செய்தனர். அப்போது, அங்கு துப்பாக்கியுடன் வந்த மர்ம நபர், திடீரென அவர்களை நோக்கிச் சுட்டார். அதில், ஸ்கேலிஸ் மற்றும் அவரது உதவியாளர்களுக்கு குண்டடிபட்டது. படுகாயம் அடைந்தவர்கள், அருகில் உள்ள மருத்துவமனை யில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபர் உட்பட நான்கு பேர் பலியானதாகக் கூறப்படுகிறது. நேற்று சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த வர்ஜீனியா போலீஸார், துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபரைச் சுற்றி வளைத்தனராம். அப்போது, அவராக துப்பாக்கியால் தன்னைச் சுட்டுக்கொண்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.துப்பாக்கிச்சூட்டில் படுகாயம் அடைந்த அமெரிக்க எம்பி., ஸ்டீவ் ஸ்கேலிஸின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்