img
img

'நியூ யார்க் மீது அணு குண்டு போடப்படும்..!'- மிரட்டல் விடுக்கும் வட கொரியா
புதன் 14 ஜூன் 2017 17:43:28

img

அமெரிக்கா - வட கொரியா பிரச்னைக்கு முடிவு தெரியாமல் இருக்கும் நிலையில், வட கொரிய தரப்பு, 'நியூ யார்க் மீது அணு குண்டு போடுவது தங் களுக்கு சிரமமான காரியம் இல்லை' என்று மிரட்டல் விடுத்துள்ளது. வட கொரியாவின் அணு ஆயுதங்கள் சோதனைகுறித்து அமெரிக்கா, தொடக்க காலம் முதலே ஆட்சேபனை தெரிவித்துவந்தது. ஆனால், 'எங்கள் தற் காப்புக்கு நாங்கள் அணு ஆயுதச் சோதனை செய்வதை கேட்கும் அதிகாரம் யாருக்கும் கிடையாது' என்று பதிலடி கொடுத்தது வட கொரியா. அவ்வளவு தான், அன்று பற்றிக் கொண்டது இரு நாடுகளுக்கும் இடையிலான பிரச்னை. அது இன்று வரை ஓய்ந்தபாடில்லை. அமெரிக்கா, கொரிய தீபகற்பத்துக்கு கடந்த சில நாள்களாக அதிக ராணுவத் துருப்புகளை அனுப்பிவருகிறது. இந்த நிலையில், வட கொரிய அரசின் செய் தித்தாளான 'ரோடங் சின்மன்' (Rodong Sinmun), 'ட்ரம்ப் இந்த ஆண்டு தொடக்கத்தில், வட கொரியா என்னதான் அணு ஆயுதச் சோதனை நடத்தினாலும், அணு குண்டை அமெரிக்காவுக்கு எதிராகப் பயன்படுத்தாது என்று அலட்சியமாகத் தெரிவித்துள்ளார். ஆனால், வட கொரியாவிலிருந்து நியூயார்க் நக ரத்துக்கு அணு ஆயுதம்மூலம் தாக்குதல் நடத்துவது ஒன்றும் சாத்தியமில்லாத காரியம் இல்லை.' என்று மிரட்டல் விடுக்கும் தொனியில் செய்தி வெளி யிட்டுள்ளது. ட்ரம்ப், இந்த ஆண்டு தொடக்கத்தில் சொன்ன கருத்துக்கு, இப்போது வட கொரியா பதிலளித்திருப்பது பலரை ஆச்சர்யப்பட வைத்துள்ளது. ட்ரம்ப், சமீபத் தில் தனது ஜப்பான் பயணத்தை அடுத்து, 'வட கொரியாவுக்கு எதிராக எந்தவித நடவடிக்கைக்கும் தயாராக இருங்கள்' என்று ஜப்பானிய பிரதமரிடம் கூறி யிருந்தார்.

பின்செல்

உலகச் செய்திகள்

img
ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்

மேலும்
img
ராணி எலிசபெத் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு

இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது

மேலும்
img
வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்

வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

மேலும்
img
பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை

இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை

மேலும்
img
16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img