டாக்கா வங்காளதேசத்தில் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 137 ஆக அதிகரித்துள்ளது. வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. இதன் காரணமாக வங்காளதேசத்தில் நேற்று முன்தினம் பேய் மழை பெய்தது. இடைவிடாது பெய்த மழையால் தலைநகர் டாக்கா, சிட்டகாங், பந்தர்பன், ரங்கமாட்டி போன்ற நகரங்களில் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட் டுள்ளது.தொடர் மழை, சூறாவளி காற்று காரணமாக பல இடங் களில் தகவல் தொடர்பு, மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தும் முடங்கியது. நேற்றும் பரவலாக வங்காள தேசம் முழுவதும் மழை பெய்து கொண்டிருந்தது. இந்த நிலையில் ரங்கமாட்டி சதார், சிட்டகாங், சந்த்னைஷ், பந்தர்பன் என பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. குடியிருப்புகள் மண்ணோடு மண்ணாக புதைந்தன.இடிபாடுகளில் சிக்கியோரை மீட்பதற்கு அரசு துரித கதியில் நடவடிக்கை எடுத்தது. ஆனாலும் தொடர் மழையால் அந்தப் பணியில் தொய்வு ஏற்பட்டது. இந்த நிலையில், பலி எண்ணிக்கை 137 ஆக அதிகரித்துள்ளது. அபாயமான பகுதிகளில் வசித்த 4 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப் பட்டு இருப்பதாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்