லண்டனில் 24 அடுக்குகள்கொண்ட 'கிரென்ஃபெல் டவரில்' தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், கட்டடம் முழுவதும் தீ பற்றி எரியும் காட்சிகள் வெளி யாகியுள்ளன. லண்டனில் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது, 'கிரென்ஃபெல் டவர்'. 24 மாடிகள்கொண்ட இந்தக் கட்டடத்தில், 100-க்கும் மேலான குடும்பங்கள் வசித்துவருகின்றன. இந்தக் கட்டடம் 1947ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இன்று, திடீரென்று இந்தக் கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதிகாலை ஏற்பட்ட தீ விபத்து, சிறிது நேரத்தில் கட்டடம் முழுவதும் பரவியது. கட்டடம் தீ பற்றி எரியும் காட்சிகள் வெளியாகியுள்ளன. சுமார் 200 தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதிகாலை நேரம் என்பதால், பலர் கட்டடத்துக்குள் சிக்கியிருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்