லண்டன்: தொழிலதிபர் விஜய் மல்லையாவை விசாரணைக்காக நாடு கடத்தும் வழக்கு சூடு பிடித்துள்ளது. இன்று லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற உள்ள விசாரணையில் மல்லயைா ஆஜராகிறார். கடந்த ஏப்ரல் மாதம் இந்தியா விடுத்த கோரிக்கையை ஏற்று மல்லையாவை கைது செய்ய இன்டர்போல் வாரண்ட் பிறப்பித்தது. அதனடிப்படையில் ஸ்காட்லாந்து யார்ட் போலீஸார் அவரை லண்டனில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ஆனால் சில மணி நேரங்களிலேயே ஜாமினில் வெளியே விடப்பட்ட அவர், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவதாகவும் பாஸ்போர்ட்டை நீதிமன்றத் தில் ஒப்படைப்பதாகவும் உறுதியளித்தார். இந்நிலையில் வழக்கு விசாரணை இன்று நடக்கிறது. அப்போது மல்லையாவை உடனடியாக இந்தியாவிற்கு அனுப்ப உத்தரவிடுமாறு, பிரிட்டிஷ் அரசு தரப்பு வாதிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா - பிரிட்டன் இடையே குற்றவாளிகளை பரிமாற்றம் செய்யும் ஒப்பந்தம் அமலில் உள்ளது. ஆனால் இதுவரை கோத்ரா வழக்கு தொடர்பாக ஒரே ஒரு நபர் மட்டுமே 2002-ல் நாடு கடத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. முடங்கிவிட்ட கிங்பிஷர் விமான நிறுவனத்தின் பெயரில் ரூ.9,000 கோடி வங்கி கடன் பெற்று திருப்பி செலுத்தாமல் லண்டனுக்கு தப்பிச் சென்றவர் மல்லையா. இவர் மீது அமலாக்கதுறை வழக்கு பதிவு செய்துள்ளது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்