ஜெர்மனியின் முனிச் நகரிலுள்ள ஒரு ரயில் நிலையத்தில், மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் போலீஸார் உட்பட பலர் காயமடைந்தனர். மர்ம நபர் ஒருவர், ஜெர்மனியின் பவேரியா மாகாணத் தலைநகர் முனிச்சிலுள்ள ரயில் நிலையம் ஒன்றில் அத்துமீறி நுழைந்து துப்பாக்கியால் சுட்டார். புறநகர் ரயில் நிலையத்தில் நடந்த இந்தத் திடீர் தாக்குதலால் பயணிகள் நிலைகுலைந்தனர். இந்தத் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பெண் போலீஸார் ஒருவர் பலத்த காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பொதுமக்களில் பலர் படுகாயமடைந்துள்ளனர். புறநகர் ரயில் நிலையத்தின் சுரங்கப் பாதையில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. மர்ம நபர், பொதுமக்கள்மீது தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கும்போதே, சம் பவ இடத்துக்கு விரைந்த போலீஸார், தாக்குதல் நடத்திய அந்த நபரின் தலையில் சுட்டனர். காயமடைந்த அவர், தற்போது போலீஸாரின் கட்டுப்பாட்டில் உள்ளார். தீவிரவாதத் தாக்குதல் இல்லை என்பதை மட்டும் கூறும் முனிச் நகர் போலீஸார், அந்த மர்ம நபரிடம் விசாரணை நடத்திவருவதாகக் கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்