கத்தார்மீது தடை விதித்ததிலிருந்து வளைகுடா நாடுகளில் தொடரும் குழப்பங்களுக்கு அமெரிக்காவே காரணம் என ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. கத்தார்மீது சவுதி அரேபியா, பஹ்ரைன் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் தூதரக உறவை முறித்துக்கொள்வதாக அறிவித்திருந்தனர். மேலும், தீவிரவாதத் துக்குத் துணைபுரிவதாகக் கத்தார்மீது பல தடைகள் விதிக்கப்பட்டு வந்தன. இதனால் வளைகுடா நாடுகள் மத்தியில் குழப்பமும், பதற்றமும் நிலவி வந் தது. இந்நிலையில் இந்த அத்தனைப் பிரச்னைகளுக்கும் அமெரிக்கா மட்டும்தான் காரணம் என ஈரானின் மூத்த தலைவர் அயோடோலா அலி கமெனேய் குற்றம் சுமத்தியுள்ளார். இதுகுறித்து அயோடோலா அலி கமெனேய் அவர்களின் அதிகாரபூர்வ தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ‘வளைகுடா நாடுகளுக்கு மத்தியில் நிலவும் குழப்பங்களுக்கு அமெரிக்காவே காரணம். ஐஎஸ் இயக்கத்துக்கும், தீவிரவாதத்துக்கும் எதிராக செயல்படுவதாக அமெரிக்கா கூறுவது வெறும் பொய்’ எனக் குற்றச்சாட்டு பதியப்பட்டுள்ளது. மேலும், ஐஎஸ் இயக்கம் என்ற ஒரு தீவிரவாத இயக்கத்தை உருவாக்கியதே அமெரிக்காதான் என்றும் கமெனேய் குற்றம் சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரான்-அமெரிக்காவின் தொடர்பு 1979 முதல் பிரிந்தே உள்ளது. இந்த இரு நாடுகளுக்கும் இடையே எவ்வித உறவும் இதுவரையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்