பெர்லின்,ஜூலை 20- ஜெர்மனியில் ஓடும் ரெயிலுக்குள் பயணிகள் மீது கோடரி மற்றும் கத்தியால் தாக்குதல் நடத்திய ஆப்கானிஸ்தான் வாலிபரை போலீசார் சுட்டுக் கொன்றனர். ஜெர்மனி நாட்டின் பவாரியா மாநிலத்தில் உள்ள டிரியூச்லிங்கென் மற்றும் உவர்ஸ்பர்க் நகரங்களுக்கு இடையில் ஓடும் மின்சார ரயில் (உள்ளூர் நேரப்படி) நேற்றிரவு 9.15 மணியளவில் உவர்ஸ்பர்க் நகரை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. ஓச்ஸென்பர்ட் நிலையத்தை அந்த ரயில் நெருங்கிய போது உள்ளே இருந்த பயணிகளில் ஒருவன் திடீரென கோடரி மற்றும் கத்தியால் சகப்பயணிகளை சரமாரியாக வெட்டினான். இந்த தாக்குதலில் மூன்று பயணிகள் படுகாயமடைந்தனர். சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. ஓச்ஸென்பர்ட் நிலையத்தில் ரயில் நின்றதும் கீழே இறங்கிச் செல்ல முயன்றவனை போலீசார் சுட்டுக் கொன்றதாகவும், ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த சுமார் 17 வயது மதிக்கத்தக்க அந்த வாலிபன் ஓச்ஸென்பர்ட் நகரில் வாழ்ந்து வந்ததாகவும் உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகள் வாயிலாக தெரியவந்துள்ளது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்