கலிபோர்னியா: அமெரிக்காவில் 2 கி.மீ. நீள பீட்சா தயாரித்து சமையல் கலைஞர்கள் சாதனை படைத்துள்ளனர். கலிபோர்னியாவில் மாகாணத்தில் இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது. கலிபோர்னியாவின் ஃபோண்டோனா நகரில் உள்ள ஆட்டோ கிளப் ஸ்பீட்வே உணவகத்தைச் சேர்ந்த 12 சமையல் கலைஞர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் இணைந்து இந்த சாதனையை படைத்தனர். 7,808 கிலோ எடை கொண்ட இந்த பீட்சாவைத் தயாரிக்க 8 மணி நேரத்துக்கும் அதிகமான நேரம் செலவழிக்கப்பட்டது. மனிதநேயம் மற்றும் நட்பைக் கொண்டாடும் வகையில் தயாரிக்கப்பட்ட இந்த பீட்சா தயாரிப்பு நிகழ்ச்சிக்கு வந் திருந்தவர்களுக்கு இலவசமாக பரிமாறப்பட்டது. மீதமுள்ள பீட்சா துண்டுகள் ஆதரவற்றோர் இல்லங்களுக்கும், உணவு வங்கிகளுக்கும் அளிக்கப்பட்டதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். இந்த சாதனையின் மூலம் உலகின் நீளமான பீட்சா என்ற பெருமையை இத்தாலியிடமிருந்து அமெரிக்க சமையல் கலைஞர்கள் தட்டிப்பறித்தனர். முன்னதாக இத்தாலியில் கடந்தாண்டு 1.93 கி.மீ. நீள பீட்சா தயாரிக்கப்பட்டதே உலக சாதனையாக இருந்தது. உலகின் நீளமான பீட்சா என்ற பெயரில் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இந்த பீட்சா இடம்பெற இருப்பது குறிபிடத்தக்கது.
வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் முன்பே முஷரப் இறந்துவிட்டால், அவரது
மேலும்Facebook Twitter Mail Text Size Printஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவி நீக்க கோரும்
மேலும்