லண்டன் பிரிட்டனில் நடத்த பொதுத் தேர்தலில் தொழிலாளர் கட்சிக்கு 38 சதவீதத்துக்கு குறைவான ஓட்டுகள் தான் கிடைக்கும் என்று பிரபல எழுத்தாளர் மேத்யூ குட்வின் தெரிவித்திருந்தார். மேலும் தன் கணிப்பு நடக்காவிட்டால் எனது புத்தகத்தை தின்பேன் என்றும் மேத்யூ கூறிருந்தார். சமீபத்தில் நடந்த பொதுத் தேர்தலில் தொழிலாளர் கட்சிக்கு 40.3 % ஓட்டுகள் கிடைத்தன. இதனையடுத்து மேத்யூவின் கணிப்பு பொய்யானதால் சமூக வலைதளங்களில் நெட்டிசன் கள் அவரை வறுத்தெடுத்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் தனியார் டிவியில் நேரடி நிகழ்ச்சியில் மேத்யூ தோன்றினார். அதில் அவர், நான் சொன்ன சொல்லை காப்பாற்றுபவன் என்றும் என் கணிப்பு தவறாக போய்விட்டதால், நான் எழுதிய புத்தகத்தை இப்போதே தின்கிறேன் எனக் கூறி அவரது புத்தகத்தை கடித்து மென்று தின்றார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்