img
img

விண்வெளியில் புதிதாக கண்டறியப்படும் கிரகத்திற்கு பெங்களூரு மாணவியின் பெயர்
திங்கள் 12 ஜூன் 2017 15:41:35

img

நியூயார்க் விண்வெளியில் புதிதாக கண்டறியப்படும் கிரகத்திற்கு பெங்களூரு மாணவியின் பெயர் சூட்டப்படும் என லிங்கன் அறிவியல் ஆய்வகம் அறிவித்துள்ளது. பெங்களூருவை சேர்ந்தவர் சாஹிதி பிங்காலி. அங்குள்ள இன்வென்ட்சர் அகாடெமியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் சமீபத்தில் அமெரிக் காவின் மாசசூசட்ஸ் லிங்கன் ஆய்வகம் நடத்திய சர்வதேச அறிவியல் மற்றும் பொறியியல் கண்டுபிடிப்பு போட்டியில் பங்கேற்றார். உலகம் முழுவதும் உள்ள பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் மிகப்பெரும் அறிவியல் போட்டியான இதில் மாசடைந்து வரும் நீர் நிலைகளை தூய் மையாக பாதுகாப்பது தொடர்பான ஆய்வு கட்டுரையை சாஹிதி சமர்ப்பித்தார். இதன் மூலம் ஆறு, ஏரி, குளங்களில் உள்ள நீரின் தூய்மை தரத்தை மொபைல் செயலி மூலமாக கண்காணிக்க முடியும். சாஹிதி சமர்ப்பித்த கட்டுரை ஆய்வாளர்களால் முதல் மூன்று இடங்களுக்குள் தேர்வு செய்யப் பட்டது. மேலும் பெங்களூருவில் மாசடைந்துள்ள வர்தூர் ஏரியை சோதித்து, அதைத் தூய்மைப்படுத்துவது தொடர்பாக சாஹிதி ஆய்வு செய்துள்ளார். இதனிடையே சாஹிதியின் இந்த கண்டுபிடிப்பை சிறப்பிக்கும் வகையில் விண்வெளியில் அடையாளப்படுத்தப்படும் சிறிய கிரகத்துக்கு சாஹிதி பிங்கா லியின் பெயரை சூட்டப் போவதாக மாசசூசட்ஸ் லிங்கன் ஆய்வகம் அறிவித்துள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ள சாஹிதிக்கு பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட‌ சமூக வலைத் தளங்களிலும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. அறிவியல் துறையில் ஆர்வம் மிகுந்த சாஹிதி, தேசிய, சர்வதேச அள விலான பல்வேறு போட்டிகளில் பங்கேற்று விருதுகளை குவித்துள்ளார்.

பின்செல்

உலகச் செய்திகள்

img
ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்

மேலும்
img
ராணி எலிசபெத் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு

இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது

மேலும்
img
வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்

வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

மேலும்
img
பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை

இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை

மேலும்
img
16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img