டமாஸ்கஸ்: ISIS அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல்பாக்தாதி கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சிரியாவில் அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாக சிரிய நாட்டு தொலைக்காட்சிகள் செய்தி வெளியிட்டு வருகின்றன. எனினும் அவர் மரணித்ததற்கான ஆதாரங்கள் எதுவும் வெளியாகவில்லை. கடந்த 2014-ம் ஆண்டு ஐ.எஸ் அமைப்பு தலைவராக 46 வயதான பாக்தாதி பொறுப்பேற்றார். அது முதல் பல்வேறு நாடுகள் மீது ஐ.எஸ் அமைப்பினரின் தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டது. இந்நிலையில் ஐ.எஸ் அமைப்பின் தலைமையிடமான ரக்வாவில், அமெரிக்க படைகள் நடத்திய வான்வழி தாக்குதலில் பாக்தாதி கொல்லப்பட்டதாக செய்திகள் வெளி வருகின்றன. ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்படுவது இது முதல் முறையல்ல. கடந்த சில மாதங்களுக்கு முன் வடக்கு ஈராக்கில் நடத்தப்பட்ட வான் வழித்தாக்குதலில், அபுபக்கர் அல் பாக்தாதி படுகாயமடைந்து, உயிருக்கு போராடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. பாக்தாதி உயிரிழந்து விட்டதாக கடந்த சில மாதங்களாக பல வதந்திகள் தொடர்ந்து வெளியாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்