தைப்பே,ஜூலை 20- தைவானில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சென்ற தனியார் பஸ் வெடித்து சிதறிய விபத்தில் 26 பேர் பலியானதாக தெரியவந்துள்ளது. தைவான் நாட்டின் தலைநகரான தைபே-வில் இருந்து தவோயுவான் பகுதியில் உள்ள பிரதான நெடுஞ்சாலை வழியாக நேற்று பிற்பகலில் சென்று கொண்டிருந்த ஒரு சுற்றுலா பஸ், சாலையோர தடுப்பில் மோதிய வேகத்தில் தீப்பற்றி, வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் 26 பேர் பலியானதாகவும், அவர்களில் பெரும்பாலானோர் சீனாவைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் எனவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் விபத்தில் பலியானவர்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக போலீஸ் பேச்சாளர் தெரிவித்தார். அதே சமயம் இவ்விபத்து தொடர்பான விசாரணை பல்வேறு கோணங்களில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்