பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் 208 பெண் வேட்பாளர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் ஆட்சிக்காலம் 2020 ஆம் ஆண்டுதான் நிறைவடைகிறது. ஆனால், ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையைத் தொடர்ந்து, பிர தமர் தெரசா மே முன்னதாகவே தேர்தலை அறிவித்தார். அதைத் தொடர்ந்து, இங்கிலாந்தின் 650 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நேற்று வாக்குப்பதிவு நடந்தது. வாக்கு எண்ணிக்கையின் முடிவில், 'மொத்தமுள்ள 650 இடங்களில், தெரசா மேவின் ஆளுங்கட்சி 315 இடங்களிலும், எதிர்க்கட்சியான தொழி லாளர் கட்சி 261 இடங்களிலும் வெற்றி பெற்றது. இந்நிலையில், பிரிட்டன் வரலாற்றில் அதிகபட்சமாக 208 பெண்கள் தேர்தலில் வெற்றிபெற்று நாடாளுமன்றத்தில் நுழையவுள்ளனர். கடந்த 2015-ல் 191 பெண் எம்.பிக்கள் பிரிட்டனில் இருந்தனர். தற்போது, 208 பெண் எம்.பிக்களில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ப்ரீத் கௌர் கில் என்பவரும் இடம் பெற்றுள்ளார். தொழிலாளர் கட்சியின் சார்பில் இவர் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார். பிரிட்டனில் எம்.பியாகும் முதல் சீக்கிய பெண் இவராகும்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்