மணிலா, பிலிப்பைன்ஸ் நாட்டின் மாராவி நகரை கைப்பற்றி அராஜகம் நடத்தி வரும் ஐ.எஸ் தீவிரவாதி களை விரட்டியடிக்க நடந்து வரும் உச்சகட்ட போரில் 13 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி யுள்ளன. ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்புடைய அபு சய்யாப் தீவிரவாத குழுவினர் இயங்கி வரும் நிலையில் ஆயுதம் ஏந்திய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வெளிநாடுகளில் இருந்து பிலி ப்பைன்ஸ் தீவுகளுக்கு சுற்றுலா வரும் பயணிகளை கடத்தி செல் லும் அபு சய்யாப் தீவிரவாதிகள், பிணைத் தொகையை பெற்றுக் கொண்டு பலரை விடுவிக் கின்றனர். பிணைத் தொகை கிடைக்காத நிலையில், பிடித்து சென்றவர் களின் தலையை வெட்டி, ஈவு இரக்கமின்றி கொன்று குவித்து வருகின்றனர். இவர்களை வேட் டையாடி அழிக்குமாறு பிலிப்பை ன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுட்டெர் ட்டே உத்தரவு பிறப்பித்துள்ளார். இதையடுத்து நாடு முழுவதும் அபு சய்யாப் தீவிரவாதிகளை வேட்டையாடும் பணியில் அந்நாட்டு ராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த இரு நாட்களாக ராணுவத்தினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே உச்சகட்ட போர் நடைபெற்று வருகிறது. நேற்று, தீவிரவாதிகளின் தாக்கு தலில் 13 வீரர்கள் பலியானதாக ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். மேலும், அந்நாட்டின் சுதந்திர தினம் கொண்டாடப்படும் நிலையில், தீவிரவாதிகளை முற்றிலும் வேரோடு அழித்து விடுவதாகவும் அவர் உறுதியேற்றுள் ளார்.
ஊசி மூலம் தனது மேல் கை தசையை கிட்டத்தட்ட
மேலும்தலிபான் பயங்கரவாதிகளுடன் அமைதிக்கான
மேலும்அறுவை சிகிச்சை மூலம் கர்ப்பிணி வயிற்றில்
மேலும்கடந்த 2003ஆம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக
மேலும்