img
img

கத்தாரில் தற்போதைய நிலை என்ன?
சனி 10 ஜூன் 2017 18:52:30

img

சவூதி அரேபிய உள்ளிட்ட ஏழு நாடுகள் கத்தாருடனாக உறவுகளை துண்டித்துள்ளது. இந்த நாடுகளின் தடையால் கத்தாரில் உள்ள தமிழர்களின் தற்போது நிலை என்பது குறித்து தமிழகம் திரும்பிய தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த தமிழர் ஒருவர் அளித்த பிரத்யேக பேட்டி. "ஏழு ஆண்டுகளாக குடும்பத்துடன் கத்தாரில் வசித்து வருகிறேன். கடந்தவாரம்தான் சொந்த ஊருக்கு வந்தேன். தற்போது சவுதி அரேபியா, துருக்கி, எமன், பஹ்ரைன் உள்ளிட்ட ஏழு நாடுகள் கத்தாருடனான உறவுகளை துண்டித்துவிட்டன. கத்தார் நாடு தீவிரவாதத்துக்கு ஆதரவாகச் செயல்படுவதாக கூறுகிறார்கள். அப்படி ஒன்றும் எங்களுக்கு தெரியவில்லை. இஸ்ரேல்- பாலஸ்தீனம் ஆகிய நாடுகளுக்கு இடையே போர் நடந்துக்கொண்டிருக்கிறது. பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் அந்த பகுதியை சேர்ந்த தலைவர் ஒருவர் காயமடைந்துள்ளார். அவருக்கு கத்தார் நாட்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பாலஸ்தீன மக்களுக்கு கத்தார் மன்னர் நேரிடையாகவே சென்று வீடுகள் கட்டிக்கொடுத்தார். தீவிரவாதத்துக்கு கத்தார் ஆதரவு கொடுப்பதில்லை. கத்தாரில் தீவிரவாதம் எதுவும் கிடையாது. அண்மையில் தலீபானுக்கும் ஆப்கானிஸ்தான் அரசுக்குமிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. கத்தாரில் வைத்து பேச்சு வார்த்தை நடத்தினால்தான் நாங்கள் வருவோம் என்று தலீபான்கள் தெரிவித்தனர். இதனால் பேச்சுவார்த்தை கத்தாரில் நடைபெற்றது. தலீபான்கள் ஆயுதங்களை போட்டுவிட்டு அரசியல் பாதைக்கு திரும்ப வேண்டும் என்பதற்காகவே தங்கள் நாட்டில் பேச்சுவார்த்தை நடத்தியது கத்தார். ஏழு நாடுகள் தடை விதித்ததற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப்தான் காரணம். வளைகுடா நாடுகளில் கத்தார் முக் கியமான நாடு. இந்த நாடுகளுக்கிடையே பிரச்னை வந்தால் கத்தார் மத்தியஸ்தம்தான் செய்யும். இது ட்ரம்புக்கு பிடிக்கவில்லை. அவருக்கு வளைகுடா நாடுகள் அமைதியாக இருக்கக்கூடாது என்பதுதான் நோக்கம். வளை குடா நாடுகள் அமைதியாக இருக்கக்கூடாது, இவர்களுக்குள் சண்டை வரவேண்டும். ஏதாவது ஒரு நாட்டை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு அங்குள்ள எண்ணெய் வளத்தை தங்கள் நாட்டுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான் ட்ரம்பின் எண்ணம். மக்கள் அமைதியாக இருக்கிறார்கள். அமைதியாக போய்க்கொண்டு இருக்கிறது. சண்டை வந்தால் மக்களின் நிலைமை மோசம்தான். கத்தாருக்கு தடை விதித்தது ஏழு நாடுகள்தான். இந்தியா உட்பட மற்ற நாடுகள் உதவி செய்துக்கொண்டிருக்கிறது. பால், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் சவூதி, துபாய் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்தது. தற் போது அந்த பொருள்கள் நிறுத்தப்பட்டுள்ளது. மற்ற நாடுகளிலிருந்து அத்தியாவசிய பொருள்கள் வந்து கொண்டிருக்கிறது. விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தடைக்கு முன்பு கத்தார் விமானங்கள் சவூதி, துபாய், ஓமன் ஆகிய நாடுகளின் வான்வழியாக செல்லும். தற்போது, கத்தார் விமானம் ஈரான் வான்வழியாக செல்கிறது. முன்பு கத்தாரிலிருந்து திருவனந்தபுரத்துக்குவர ஐந்து மணி நேரமாகும். இந்த பிரச்னையால் தற்போது ஏழு மணி நேரமாகிறது. கத்தார் நாட்டில் நிறைய நாடுகள் முதலீடு செய்திருக்கிறது. இந்தியா மட்டுமின்றி ஐரோப்பிய நாடுகள் அதிகளவு முதலீடு செய்துள்ளது. ஆயில், கேஸ் ஆகியவை கத்தாரிலிருந்துதான் இந்தியாவுக்கு வருகிறது. உலகத்தில் தனி மனித வருவாயில் பணக்கார நாடு கத்தார்தான். 2021ஆம் ஆண்டு கத்தாரில் உலககோப்பை கால்பந்து போட்டி நடைபெறுகிறது. ஆசிய நாடு ஒன்று முதன் முறையாக இந்த போட்டியை நடத்துகிறது. கால்பந்து போட்டியில் ஐரோப்பிய நாடுகள்தான் முக்கிய பங்கு வகிக்கிறது. தற்போதையை பிரச்னையில் இந்த நாடு மத்தியஸ்தம் செய்யும். இந்த பிரச்னை இன்னும் ஒருமாதத்தில் சரியாகிவிடும். தமிழர்கள் அனைவரும் நன்றாக இருக்கிறார்கள். வழக்கம்போல் தங்கள் வேலைகளை செய்துக்கொண்டிருக்கிறார்கள்" என்றார்.

பின்செல்

உலகச் செய்திகள்

img
ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்

மேலும்
img
ராணி எலிசபெத் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு

இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது

மேலும்
img
வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்

வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

மேலும்
img
பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை

இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை

மேலும்
img
16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img