img
img

காதலனை தேடி இலங்கை வந்த சீன யுவதி
சனி 10 ஜூன் 2017 18:05:02

img

இலங்கையை சேர்ந்த இளைஞனை நான்கு வருடங்களாக காதலித்த சீன யுவதி ஒருவர், இளைஞனை தேடி இலங்கைக்கு வந்துள்ள சம்பவம் நாவலப் பிட்டி பிரதேசத்தில் நடந்துள்ளது. சீன யுவதி ஜப்பானில் ஒரு தனியார் நிறுவனத்தில் தொழில் புரிந்து வந்தார்.அப்போது தென் கொரியாவில் தொழில் புரிந்தத இலங்கை இளைஞன் ஒருவர் ஜப்பானுக்கு சென்றிருந்த போது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. இலங்கைக்கு சென்று மீண்டும் உங்களை திருமணம் செய்து கொள்வதாக இளைஞன் வாக்குறுதியளித்துள்ளார். அதன்படி நம்பி ஏமாந்த சீன யுவதி இலங்கைக்கு அந்த பையன் வீட்டுக்குச் சென்றுள்ளார். தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார். இளைஞன் அதற்கு மறுப்பு தெரிவித் ததை தொடர்ந்து யுவதி நாவலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள சீன யுவதி,“ நான் நான்கு வருடங்களாக இவரை காதலித்து வருகிறேன். திருமணம் செய்வதாக வாக்குறுதி வழங்கியதால், நாங்கள் நெருங்கி பழகினோம். இலங்கை சென்று திரும்பியதும் திருமணம் செய்து கொள்வதாக கூறினார்.அவர் வரவில்லை. இதனால், நான் அவரை தேடி வந்தேன். அவர் இல்லாமல் என்னால் வாழ முடியாது. அவரை என் உயிரை விட அதிகமாக நேசிக்கின்றேன். எப்படியாவது அவரை எனக்கு திருமணம் செய்து வையுங்கள். அவருக்காகவே நான் இலங்கை வந்தேன். நான் அவரது வீட்டுக்கு சென்ற போது என்னை அவர் புறக்கணித்தார். வெளியில் சென்று எங்கே தங்கி விட்டார். அவர் வரும் வரை நான் வீட்டில் காத்திருந்தேன்.எனினும் அவர் வரவில்லை. அவரது தாயும் தந்தையும் நல்லவர்கள். என்னை நன்றாக உபசரித்தனர்“ எனக் கூறியுள்ளார். இது தொடர்பாக இளைஞன் தெரிவிக்கையில்,“சீனப் பெண்ணை திருமணம் செய்வதில் எனக்கு விருப்பம். எனினும் திருமணம் செய்த பின்னர் இலங்கை யில் வசிக்க அவர் விரும்பவில்லை. அது மாத்திரமல்ல நாவலப்பிட்டியில் உள்ள சொத்துக்களை விற்பனை செய்து விட்டு பணத்தை எடுத்துக்கொண்டு அவருடன் அவரது நாட்டில் குடியேற வருமாறு கூறுகிறார். சொத்துக்களை விற்பனை செய்ய எனக்கு விரும்பமில்லை. நான் என் பெற்றோரை கவனிக்க வேண்டும். இலங்கையில் குடியேற விரும்பினால், நான் திருமணம் செய்து கொள்வேன். இல்லையென்றால் முடியாது” என இளைஞன் கூறியுள்ளார். சீனாவில் பெற்றோர் தனியாக வசிப்பதால், அவர்களை தனித்து விட முடியாது எனக் கூறி இளைஞனின் யோசனைக்கு யுவதி மறுப்பு தெரிவித்துள்ளார். இதனையடுத்து பொலிஸ் முறைப்பாட்டை திரும்ப பெற்ற யுவதி, இலங்கையில் இருந்து புறப்பட்டுச் செல்லும் வரை இளைஞனின் வீட்டில் தங்கியிருக்க அவரது வீட்டுக்கு சென்றதாக நாவலப்பிட்டி பொலிஸார் கூறியுள்ளனர்.

பின்செல்

இலங்கைச் செய்திகள்

img
இலங்கையில் பொதுமக்களுடன் சேர்ந்து அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள் தீவிர போராட்டம்!

இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத

மேலும்
img
சுதந்திர தினத்தன்று தேசிய கீதம் தமிழ்மொழியிலும் இசைக்கப்பட வேண்டும்

அங்கஜன் இராமநாதன் கோரிக்கை

மேலும்
img
மைத்திரிபால ஸ்ரீசேனவின் அதிரடி அறிவிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால

மேலும்
img
கோத்தபாயவின் அரசாங்கம் சமமான பாதுகாப்பு வழங்குவதாகத் தெரிவிப்பு

அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்

மேலும்
img
அதிபர் வேட்பாளர் விரைவில் அறிவிப்பு

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img