கத்தார் விவகாரத்தில் வளைகுடா நாடுகள் மத்தியில் பதற்றம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் கத்தார் நாட்டை தனிமைப்படுத்துவதாக அறிவித்த சவுதி அரேபியாவுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் வெளிப்படையான மிரட்டல் விடுத்துள்ளனர். கத்தார் உடனான அத்தனை உறவுகளையும் முறிப்பதாக வளைகுடா நாடுகள் அறிவித்திருந்தன.தீவிரவாதத்துக்கு கத்தார் துணைபுரிவதாகக் குற்றம் சுமத்தப்பட்டது. இந்தக் குற்றத்தை கத்தார் முற்றிலுமாக மறுத்து வருகிறது. இந்நிலையில், கத்தாரிடமிருந்து நிதியுதவி பெறுவதாகக் கூறப்படும் தீவிர வாத அமைப்புகளுள் ஒன்றான ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தினர் நேற்று ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளனர். அதில், கத்தாருக்கு எதிரான நட வடிக் கையை தொடங்கி வைத்த சவுதி அரேபியாவுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் வெளிப்படையாக தாக்குதல் மிரட்டல் விடுத்துள்ளனர். ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் வெளியிட்டுள்ள அந்த வீடியோ பதிவில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் ஐந்து பேர் முகமூடி அணிந்து பேசுகின்றனர். அதில், ‘தற் போது ஈரானுக்கு பிறகு, உங்களுக்கான முறைதான் சவுதி அரேபியா. உங்கள் சொந்த இடத்திலேயே தாக்குகிறோம்’ என மிரட்டல் அறிவிப்பு வெளி யிட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்