வளைகுடா நாடுகளிடமிருந்து கத்தார் தனிமைப்படுத்தப்பட்ட விவகாரத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது கருத்தை ஆவேசமாகப் பதிவு செய்துள்ளார். தீவிரவாதத்துக்கு துணைபுரிவதாகக் குற்றம்சாட்டப்பட்டு கத்தார் நாடு வளைகுடா நாடுகளிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. சவுதி, ஐக்கிய அமீரகம் உள்ளிட்ட நாடுகள் கத்தாருடனான தங்கள் தூதரக உறவுகள் அனைத்தையும் முறித்துள்ளன. வான் வழியிலும், கடல் வழியிலும் கத்தார் விமானங்கள், கப்பல்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும், கத்தார் தூதர்களையும் நாடு திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தொடக்கத்திலிருந்தே எதிர்பார்க்கப்பட்டு வந்த அமெரிக்காவின் நிலைப்பாடு குறித்த கேள்விக்கு தற்போது விடை கிடைத்துள்ளது. நேற்று வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த ட்ரம்ப், ‘தீவிரவாதத்துக்கு நிதியுதவி அளிப்பதை நீண்ட காலமாகவே தொடர்ந்து வரு கிறது கத்தார். இதுகுறித்து அண்டை நாடுகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் கத்தார் நடவடிக்கையின் மீது தீவிர கண்டனங்களைப் பதிவு செய்ய வுள்ளோம்’ என்றார். இவ்விவகாரம் குறித்து ட்ரம்ப் மேலும் கூறுகையில், ‘முதலில் தீவிரவாதத்துக்கு நிதி அளிப்பதை நிறுத்துங்கள். வெறுப்பை போதிப்பதை நிறுத்துங்கள். படுகொலைகளை நிறுத்துங்கள். எந்தவொரு நாட்டையும் நான் குறிப்பிட்டு கூற விரும்பவில்லை. உலக நாடுகளுக்கான பொது அறிவிப்பாக எடுத்துக் கொண்டு பிரச்னைகளை இணைந்து களைவோம்’ என ஆவேசமாகப் பேட்டியளித்துள்ளார்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்