img
img

பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறிய தெரசா மே
வெள்ளி 09 ஜூன் 2017 17:03:44

img

பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலில் ஆளுங்கட்சி சார்பில் போட்டியிட்ட தெரசா மே, பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறிவிட்டார். அதனால், பிரிட்ட னில் தொங்கு நாடாளுமன்றம் அமைய உள்ளது. இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் ஆட்சிக்காலம் 2020 ஆம் ஆண்டுதான் நிறைவடைகிறது. ஆனால், ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையைத் தொடர்ந்து, பிரதமர் தெரசா மே முன்னதாகவே தேர்தலை அறிவித்தார். அதைத் தொடர்ந்து, இங்கிலாந்தின் 650 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது. தெரசா மே-யின் கன்சர்வேடிவ் கட்சி மற்றும் தொழிலாளர் கட்சிக்கு இடையே கடுமையான போட்டி நிலவியது. வாக்குப்பதிவு முடிந்த உடனேயே, வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில், தெரசா மே-யின் கன்சர்வேடிவ் கட்சி அதிக தொகுதிகளில் முன்னிலை வகித்தா லும், பெரும்பான்மை இடங்களைப் பிடிக்க இயலவில்லை. மொத்தமாக 326 இடங்களைப் பெற்றால் மட்டுமே வெற்றி என்ற சூழல் நிலவிவருகி றது. இந்நிலையில், மொத்தமுள்ள 650 இடங்களில், ஆளுங்கட்சி இதுவரை 315 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. எதிர்க்கட்சியான லேபர் கட்சி 261 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதனால், பிரிட்டனில் தொங்கு நாடாளுமன்றம் அமைய உள்ளது.

பின்செல்

உலகச் செய்திகள்

img
ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்

மேலும்
img
ராணி எலிசபெத் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு

இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது

மேலும்
img
வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்

வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

மேலும்
img
பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை

இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை

மேலும்
img
16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img