இங்கிலாந்தின் ‘பிரெக்ஸிட்’ முடிவைத் தொடர்ந்து, பிரிட்டன் பாராளுமன்றத்துக்கான தேர்தல் இன்று நடைபெற்றுவருகிறது. ஐரோப்பிய ஒன்றியத்துடன் 44 ஆண்டு காலமாக இருந்துவந்த பிரிட்டன், தற்போது லிஸ்பன் உடன்படிக்கை (EU's Lisbon Treaty ) 50-வது விதி யின் சட்டப்படி, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதாக அறிவித்தது. இரண்டு வருடங்களில் வர்த்தகம், இடம்பெயர்வு, கல்வி, சுகாதாரம் உள் ளிட்டவை சார்ந்த சட்ட நடைமுறைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு, முழுவதுமாக பிரிட்டன் விலகும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, வலிமை வாய்ந்த நாடாக நிலையான தலைமையுடன் தனித்து இயங்குவதற்காக பிரிட்டன் பொதுத்தேர்தலை அறிவித்தது. இங்கிலாந்து பாராளுமன்றத்தின் ஆட்சிக் காலம் 2020 ஆம் ஆண்டுதான் நிறைவடைகிறது.ஆனால், ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையைத் தொடர்ந்து, பிரதமர் தெரசா மே-யின் அறிவிப்பின்படி இன்று பொதுத்தேர்தல் நடைபெற்றுவருகிறது. இதன்படி, இங்கிலாந்தின் 650 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது. தேர்தல் கருத்துக்கணிப்புகளின் அடிப்படையில், தெரசா மேயின் கன்சர்வேடிவ் கட்சிக்கு ஆதரவு அதிகரித்தே காணப்படுவதாக அறிவிப்புகள் வெளியாகிவருகின்றன. ஆனாலும், எதிர்க்கட்சியான தொழிற்கட்சியும் கடும் போட்டியில் நிற்கிறது. இதனால், தெரசா மே தனது ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்வாரா... என்ற கேள்வியும் எழுந்துவருகிறது.
வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் முன்பே முஷரப் இறந்துவிட்டால், அவரது
மேலும்Facebook Twitter Mail Text Size Printஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவி நீக்க கோரும்
மேலும்