img
img

மியன்மாரில் இராணிவ விமானம் விழுந்து நொருங்கியது. 116 பேர் பலி
வியாழன் 08 ஜூன் 2017 11:57:02

img

யாங்கோன், மியன்மாரில் நேற்று பிற்பகலில் காணாமல் போன இராணுவ விமானம் விழுந்து நொறுங்கியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அதில் பயணம் செய்த 116 பேரும் பலியாகியுள்ளனர் என்று அஞ்சப்படுகிறது. காணாமல் போன அந்த விமானத்தின் பாகங்கள் கடலில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதால் விமா னத்தில் பயணம் செய்த 116 பேரும் பலியாகியிருக்கலாம். மியன்மார் நாட்டில் மயீக் நகரிலிருந்து யாங்கோன் நகரை நோக்கி 116 பேருடன் ராணுவ விமானம் சென்று கொண்டிருந்தது. தவேய் நகரில் இருந்து 20 மைல் தொலைவில் விமானம் சென்று கொண்டிருந்தபோது விமானம் காணாமல் போனது. இந்த விமானத்தின் பாகங்கள் கடலில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த விமானம் விபத்தில் சிக்கியிருக்கலாம் எனவும் விமானத்தில் பயணித்தவர்கள் பலியாகி யிருக்கலாம் எனவும் கருதப்படுகிறது. விமானத்தில் பயணம் செய்தவர்களில் பெரும்பாலோர் இராணுவ வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் ஆவர். நேற்று பிற்பகலில் மயீக் மற்றும் யாங்கோனுக்கு இடையே சென்ற போது விமானம் ராடார் சமிக்ஞையிலிருந்து மறைந்தது. தரைக்கட்டுப்பாட்டு நிலை யத்தில் இருந்து விமானிகளை தொடர்பு கொள்ள முடியாததால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். விமானத்தை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ள தாக ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். நேற்று இரவு வரையில் வானிலை மோசமாக இருந்ததால் விமானம் விழுந்த இடத்தை நெருங்குவதில் வீரர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். நேற்று இரவு 10.30 மணி வரையில் எந்தவொரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பையும் மியன்மார் அரசாங்கம் வெளியிடவில்லை.ஆனால் விமானம் விபத்துக் குள்ளானதாக அது அறிவித்துள்ளது.

பின்செல்

உலகச் செய்திகள்

img
ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள் கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்

மேலும்
img
ராணி எலிசபெத் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு

இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது

மேலும்
img
வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு தசாப்தங்களில் பிறந்த இரட்டையர்கள்

வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்

மேலும்
img
பத்திகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் 5 பேருக்கு தூக்குத் தண்டனை

இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை

மேலும்
img
16 ஆயிரம் வீரர்களுடன் அமெரிக்காவில் விண்வெளி படை

16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img