தோஹா: தீவிரவாதிகளுக்கு ஆதரவளிப்பதாக கூறும் குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள கத்தார் வெளிப்படையான, நேர்மையான பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது. பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதாக குற்றம்சாட்டி கத்தார் நாட்டுடனான உறவுகளை பஹ்ரைன், சவுதி அரே பியா, எகிப்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் துண்டித்துக் கொள்வதாக அறிவித்தன. மேலும் ராஜாங்க ரீதி யிலான உறவையும் துண்டித்துக் கொள்வதோடு, கடல், வான் மற்றும் தரை வழிப் போக்குவரத்துக்கும் மேற்கண்ட நாடுகள் தடை விதித்தன. இதனால் கத்தார் நாட்டிற்கு செல்ல வேண்டிய விமானப் பணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் கத்தார் நாட்டை இணைக்கும் சால்வா என்னும் நெடுஞ்சாலையை சவுதி அரசு மூடிவிட்டது. இதனால் இருநாடுகளுக்கும் இடையேயான சாலைப் போக்குவரத்தும் முடங்கியுள்ளது. பொருட்களை கொண்டு செல்லும் கண்டெய்னர் லாரிகள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன. இதனிடையே பஹ் ரைன், சவுதி அரேபியா, எகிப்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் உள்ள கத்தார் நாட்டின் குடிமக்கள் 2 வாரங்களில் அந்நாடுகளில் இருந்து வெளியேற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தீவிரவாதிகளுக்கு ஆதரவளிப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டை கத்தார் மறுத்துள்ளது. வெளிப்படை தன்மையுடன் நேர்மையான பேச்சு வார்த்தைக்கு தயாராக உள்ளதாக அந்நாடு கூறியுள்ளது. மேலும் அண்டை நாடுகளுடனான உறவு துண்டிக்கப்பட்டுள்ளதையடுத்து, கத்தாரில் அத்தியாவ சிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்