ஈரான் நாடாளுமன்றத்தில் நடந்த திடீர் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்தார். இந்தத் தாக்குதலில், தீவிரவாதியிடம் சிலர் பணயக் கைதிகளாகச் சிக்கியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஈரான் நாடாளுமன்றத்தில், இன்று காலை மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியுள்ளார். இந்தத் தாக்குதலில், நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளார். உள்நாட்டு ஊடகங்களின் சமீபத்திய தகவல்களின் அடிப்படையில், தீவிரவாதியிடம் சிலர் பணயக் கைதி களாகச் சிக்கியுள்ளனர் என்று கூறப்படுகிறது. பாதுகாப்பு அதிகாரியுடன், மேலும் இரு நாடாளுமன்றப் பார்வையாளர்கள் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. காயமடைந்தவர்களின் விவரமோ, பணயக் கைதிகளின் நிலைகுறித்தோ இதுவரை எந்தவொரு அதிகாரபூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை. தற்போது, ஈரான் மெட்ரோ ரயில் நிலையம் அருகிலும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதுகுறித்த முழு தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்