சிட்னி ஆஸ்திரேலியா விமான நிலயத்தில் உயிர் பயத்தில் பயணிகள் விமானத்தில் இருந்து குதித்து தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் உள்ள விமான நிலயத்தில் நேற்று சிறிய ரக விமானம் ஒன்று சுமார் 40 பயணிகளுடன் தரையிறங்கியது. அப்போது, அந்த விமானத்தின் கழிப்பறைக்கு சென்ற ஒரு பயணி, அங்கு கிடந்த ஒரு மர்ம கடிதத்தை படித்துப் பார்த்து பதற்றம் அடைந்தார். விமானம் ஓடுபாதையில் மெதுவாக ஊர்ந்து சென்று கொண்டிருந்த வேளையில் கழிப்பறையில் இருந்து வெளியே ஓடிவந்த அவர், விமானத்தில் வெடி குண்டு வைக்கப்பட்டுள்ளது. உடனடியாக, பெட்டி, படுக்கைகளை எல்லாம் விட்டுவிட்டு, உயிரை காப்பாற்றிக்கொள்ள தப்பி ஓடுங்கள் என்று அவர் கூச்ச லிட்டார். இதையடுத்து, நகரும் படிக் கட்டை பொருத்துவதற்கு வசதி யாக திறந்திருந்த விமானத்தின் கதவு வழியாக பலர் கீழே குதித்து, பீதியால் அல றியவாறு தலை தெறிக்க ஓட்டம் பிடித்தனர். உடனடியாக அந்த விமானத் தின் அருகே விரைந்துவந்த வெடிகுண்டு நிபுணர்கள் துல்லியமாக சோதனையிட்ட போது, உள்ளே வெடிப்பொருள் ஏதும் கிடைக்கவில்லை. மேற் கண்ட மிரட்டல் கடிதத்தை எழு தியவர் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட் டதாக நியூ சவுத் வேல்ஸ் போலீ சார் குறிப்பிட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்