சிரியாவில் கடந்தாண்டு உள்நாட்டுப் போரின்போது கட்டட இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்ட ஒரு சிறுவனின் புகைப்படம் உலக மக்கள் மத்தியில் தாக் கத்தை ஏற்படுத்தியது. அந்தச் சிறுவனின் பெயர் ஓம்ரான். அவன் தற்போது எப்படி இருக்கிறான்.? கடந்தாண்டு கிளர்ச்சியாளர்கள் வசம் சிக்கிய சிரியாவின் அலெப்போ நகரை மீட்க அரசின் விமானப்படைகள் தாக்குதல் நடத்தின. இதனால் அலெப்போ நகரம் போர்க்களமானது. அந்தச் சூழலில் குவாட்ரிஜ் என்ற இடத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கட்டடம் ஒன்று இடிந்து தரைமட்டமானது. அந்தக் கட்டடத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்றபோது, இடிபாடுகளில் சிக்கியிருந்த ஐந்து வயதுச் சிறுவன் ஓம்ரான் தக்னீஷை ராணுவத்தினர் மீட் டெடுத்தனர். ஓம்ரான் தலையில் ரத்தக் காயங்கள்.. உடல் முழுக்கத் தூசி.. இந்தக் கோரக் காட்சி இணையத்தில் வைரலாகப் பரவியது. தன்னைச் சுற்றி என்ன நடக் கிறது என்று அறியாத ஓம்ரான் தன் தலையில் வழிந்த ரத்தத்தைத் துடைத்துக்கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தான். அந்த வீடியோ காட்சி உலகத் தையே துடிக்கவைத்தது. உலக மக்களின் நெஞ்சை உலுக்கிய அந்தக் காட்சி சிரியாவின் கோர முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியது. உலக மக்களின் அன்பைப் பெற்ற அந்தச் சிறுவன் தற்போது எப்படி இருக்கிறான் என்று சிரியா ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. ஓம்ரான் தற் போது நல்ல ஆரோக்கியத்துடன் அவர் பெற்றோர்களுடன் அலெப்போ நகரில் வசித்து வருவதாகக் கூறப்படுகிறது. அவரின் அண்மை புகைப்படம் ஒன் றும் வெளியாகிவுள்ளது. புன்னகையுடன் போட்டோவுக்குப் போஸ் கொடுத்துள்ள ஓம்ரானுக்கு நெட்டிசன்ஸ் வாழ்த்துகளையும் ஆசீர்வாதங்களையும் பதிவு செய்து வருகின்றனர்!
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்