வடகொரியாவில் சக்திவாய்ந்த, அதிநவீன போர் விமானங்களின் சாகச நிகழ்வு அதிபர் 'கிம் ஜாங் உன்' தலைமையில் நடைபெற்றது. இந்த சாகச நிகழ்வுகளால் தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் பதற்றத்தில் உள்ளன. தொடர் ஏவுகணைச் சோதனை, அணு ஆயுதச் சோதனை என உலக நாடுகளுக்கு அச்சுறுத்தல் அளிக்கும் வகையிலேயே வடகொரியாவின் செயல்கள் உள்ளன. சர்வதேச அளவிலும், ஐநா-வின் மூலமாகவும் பல எச்சரிக்கைகள் கொடுத்த பின்னரும் தன் நிலைப்பாட்டை இதுவரையிலும் வடகொரியா மாற்றிக்'கொள்ளவே இல்லை. இதற்கான சமீபத்திய சாட்சி, வடகொரியா தன்னுடைய ராணுவத்தின் அதிநவீன போர் விமானங்களையும், ஜெட் ரக விமானங்களையும் சாகச நிகழ்வில் பங்குபெறச் செய்துள்ளது. இந்த சாகச நிகழ்வுகளை வடகொரியா அதிபர் 'கிம் ஜாங் உன்' கண்டு ரசிப்பது போன்ற புகைப்படங்கள் வடகொரிய ஊடகங்கள் மூலம் தற்போது வெளியாகியுள்ளன. போர் விமானங்களைத் தாக்கி அழிப்பது, குண்டு வெடிப்பு நிகழ்த்துவது, ஏவுகணைத் தாக்குதல்கள் எனப் பல சாகசங்களை வடகொரிய போர் விமானங்கள் நிகழ்த்திக் காட்டியுள்ளன.ஏற்கெனவே கொரிய தீபகற்பப் பகுதியில் போர் பதற்றம் அதிகரித்துக் காணப்படும் இச்சூழலில் வடகொரியாவின் இம்மாதிரியான செயல்கள் ஜப்பான், தென்கொரியா போன்ற நாடுகளின் பதற்றத்தை அதிகரித்துள்ளன.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்