லண்டன் நகரின் மையப்பகுதியில் உள்ள லண்டன் பாலத்தில், நேற்று முன்தினம் வாகனத்தை வேகமாக ஓட்டிவந்த மர்ம நபர்கள், சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தவர்கள் மீது மோதினர். அந்த மர்ம நபர்கள், இதே போன்று மூன்று முறை பாதசாரிகள் மீது வேனை மோதி விபத்து ஏற்படுத்தியுள் ளனர். அதுமட்டுமன்றி, கத்தியால் பலரைத் தாக்கியுள்ளனர். அவர்கள் ஏற்படுத்திய இந்த விபத்தில், சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த 30-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ளனர். ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சம்பவ இடத்துக்கு விரைந்த லண்டன் போலீஸ், தாக்குதல் நடத்திய மூன்று நபர்களைச் சுட்டு வீழ்த்தியதாகக் கூறப்பட்டது. இந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர். தற்போதுவரை, இந்தச் சம்பவம் தொடர்பாக 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந் நிலையில், உயிரிழந்தவர்களில் இரண்டு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி, கனடா மற்றும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து நாடுகளைச் சேர்ந்த இருவர் காயமடைந்துள்ளனர்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்