பிரிட்டன் தலைநகரான லண்டனில் நேற்று நிகழ்ந்த இரு தீவிரவாத தாக்குதல் சம்பவங்களில் எழுவர் பரிதாபமாக உயிரிழந்தனர். லண்டனில் உள்ள உல கப் புகழ்பெற்ற பாலத்தில் சென்று கொண்டிருந்த வேன் ஒன்று அப்பாலத்தில் சென்று கொண்டிருந்த பாதசாரிகள் மீது மோதியது. இதனையடுத்து, மூன்று பேர் லண்டன் பாலத்திலிருந்து அருகிலுள்ள பரோ மார்க்கெட் என்ற பகுதிக்குள் கத்திகளுடன் ஓடினர். கண்ணில் தென்பட்டவர்கள் மீது சரமாரியாக தாக் குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பலர் காயம் அடைந்ததாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியது. காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து, தாக் குதல்காரர்களை வேட்டையாடும் பணியில் லண்டன் போலீஸ் துரிதமாக ஈடுபட்டனர். தாக்குதல்தாரிகள் மூன்று பேரையும் லண்டன் போலீஸ் சுட்டுக் கொன்றது. இது பயங்கரவாத தாக்குதலாகவே கருதப்படுவதாக லண்டன் போலீஸ் தெரிவித்து உள்ளது. லண்டன் பாலத்தில் தாக்குதல்தாரிகளால் பொதுமக்களில் எழுவர் கொல்லப்பட்டுள்ளனர். தாக்குதல் குறித்து தகவல் கிடைத்ததும் போலீஸ் துரிதமாக, தைரியமாக செயல்பட்டது. போலீஸ் நடத்திய மூன்று ஆண் தாக்குதல்தாரிகள் கொல்லப்பட்டனர் என பிரிட்டிஷ் பயங்கரவாத எதிர்ப்பு படை அதிகாரி மார்க் ரோவ்லே கூறியுள்ளார். தாக்குதல் நடத்தியவர்கள் தங்களுடைய உடலில் வெடிகுண்டுகளை கட்டியவாறு தோற்றத்தை ஏற்படுத்தி உள்ளனர், ஆனால் அவை போலியானவை என பின்னர் தெரியவந்து உள்ளது. இதற்கிடையே தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியில் இருந்து 30-க்கும் மேற்பட்டோரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றதாக ஆம்புலன்ஸ் சர்வீஸ் தரப் பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தாக்குதலை அடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. பிரிட்டனின் மான்செஸ்டர் நகரில் நடந்த தற்கொலை தாக்குதல் ஒன்றில் 22 பேர் கொல்லப்பட்ட சம்பவம் நடந்து இரண்டு வாரத்துக்குள்ளாக இந்த சம் பவம் நடந்துள்ளது. பிரிட்டனில் தேர்தல் நடைபெற உள்ளநிலையில் அடுத்தடுத்த பயங்கரவாத தாக்குதலானது பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்