வெள்ளம் மற்றும் மண் சரிவினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கையில் அமெரிக்கப் படையினர் ஈடுபட்டுவருகின்றனர். இலங்கையின் தென் மாகாணம் உட்பட 12 மாவட்டங்கள் வெள்ளத்தினால் மூழ்கியதுடன், மண் சரிவினால் பலர் இடம் பெயர்ந்துள்ளனர். இதுவரை 224 உயிரிழந்துள்ளனர் எனவும், பலர் காணாமல் போயுள்ளனர் எனவும் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், ஏழு லட்சம் பேர் இடம் பெயர்ந்துள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், சர்வதேச நாடுகள் பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது. சீனா, ஜப்பான், அமெரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்தி ரேலியா போன்ற பல்வேறு நாடுகள் அவசர உதவியினை வழங்கியுள்ளன. இன்று அமெரிக்கா 350 மில்லியனை இலங்கைக்கு வழங்கியுள்ளது. மேலும் களுத்துறை மாவட்டத்தில் வெள்ளத்தினால் சேதமடைந்துள்ள பள்ளிகளை மறு சீரமைப்பதில் அமெரிக்கப் படையினரும் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க முடியாத
மேலும்அங்கஜன் இராமநாதன் கோரிக்கை
மேலும்ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் மைத்திரிபால
மேலும்அதிபர் கோத்தபாய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும் தமிழ், முஸ்லிம்
மேலும்