ஆறு பேரை பலிகொண்ட லண்டன் தீவிரவாத தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளனர். லண்டன் நகரின் மையப்பகுதியில் உள்ள லண்டன் பாலத்தில் நேற்றிரவு வாகனத்தை வேகமாக ஓட்டி வந்த மர்ம நபர்கள், சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தவர்கள் மீது மோதி உள்ளனர். அந்த மர்ம நபர்கள் இதே போன்று மூன்று முறை பாதசாரிகள் மீது வேன் மோதி விபத்து ஏற்படுத்தி உள்ளனர். அது மட்டுமன்றி கத்தியால் பலரை தாக்கி உள்ளனர். அவர்கள் ஏற்படுத்திய இந்த விபத்தில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த 20க்கும் மேற்பட் டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சம்பவ இடத்துக்கு விரைந்த லண்டன் போலீஸ், தாக்குதல் நடத்திய மூன்று நபர்களையும் சுட்டு வீழ்த்தி விட்டதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதல் குறித்து ட்ரம்ப் டுவிட்டரில் பதிவு செய்துள்ளனர். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ‘லண்டன் தாக்குதல் அதிர்ச்சியும் வருத்தமும் அளிக்கிறது. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு வருத்தம் தெரிவித்து கொள் கின்றேன். லண்டனுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அமெரிக்கா செய்யும்’ என்று Tweet செய்துள்ளார். மேலும் கண்டனங் களையும் பதிவு செய்துள்ளார்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்