கம்போடியா: கம்போடியா கார் மெக்கானிக் ஒருவர் யூடியூப் தளத்தில் வீடியோக்களை பார்த்து தனக்கென சொந்த விமானம் ஒன்றை தயாரித்துள்ளார். கம்போடியாவை சேர்ந்த 30 வயதான வர் பாயென்லாங், கார் மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார். பகல் முழுவதும் கடுமையாக உழைக்கும் இவர், இரவில் தூங்காமல் விமானம் தயாரிப்பது சார்ந்த யூடியூப் வீடியோக்களை பார்த்து வந்துள்ளார். விமானம் தயாரிப்பில் அதிக ஆர்வம் கொண்ட இவர், தானும் ஒரு விமானத்தை தயாரிக்க வேண்டும் என முடிவு செய்தள்ளார். இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் பயன்படுத்திய போர் விமானத்தை வாங்கி அதை சரி செய்யும் முயற்சியில் இறங்கினார். ஒற்றை இருக்கை கொண்ட போர் விமானத்தில் இருந்த பழைய கருவிகள் மற்றும் பொருட்களை உருக்கி அவற்றை இன்றைய சூழலுக்கு ஏற்ப மாற்றியமைத்துள்ளார். விமானம் முழுக்க தயாரானதும் கடந்த மார்ச் மாதத்தில் விமானத்தை வெற்றிகரமாக இயக்கியுள்ளார். வயல் வெளிக்கு அருகே அமைக்கப்பட்ட விமான தளத்தில் விமானத்தை நிறுத்தியிருந்தார். அந்த விமானத்தை 3 பேர் தள்ளி என்ஜினை இயங்க உதவி செய்தனர். இந்த விமானத்தை அவர் தனது வீட்டில் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக தயாரித்துள்ளார்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்