அயர்லாந்தின் பிரதமராக இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட லியோ வராத்கர் தேர்வு செய்யப்படுவார் என அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. அயர்லாந்தின் தற்போதைய பிரதமர் என்டா கென்னி தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்யவுள்ளார். இதனால், இன்று அயர்லாந்தின் அடுத்த பிரத மரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்று வருகிறது. இத்தேர்தலில் அயர்லாந்து நலத்துறை அமைச்சர் லியோ வராத்கர் மற்றும் அயர்லாந்தின் வீட்டு வசத்துறை அமைச்சர் சைமன் கவேன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதில் லியோ வராத்கர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் ஆவார். இவரது தந்தை மும்பையைச் சேர்ந்தவர். தாயார் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர். இன்றைய தேர்தலில் அதிக ஆதரவு லியோ வராத்கருக்கே உள்ளது. இந்தப் பிரதமர் தேர்தலில் வெற்றி பெற்றால், அயர்லாந்தின் முதல் இளம் பிரதமர், முதல் ஓரினச்சேர்க்கையாளர் பிரதமர், முதல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரதமர் எனப் பல பெருமைகள் லியோ வராத்கருக்கு வரும்.அயர்லாந்து பிரதமர் தேர்தலுக்கான முடிவுகள் இந்திய நேரப்படி இன்று இரவு 10 மணியளவில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்