பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில், ஐஎஸ்ஐஎஸ் நடத்திய திடீர் தாக்குதலில் 36 பேர் பலியாகியுள்ள தாகவும், 54 பேர் காயமடைந்துள்ளதாகவும் தக வல்கள் வெளியாகிவருகின்றன. உலகம் முழுவதிலும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது, ஐஎஸ் தீவிரவாத இயக்கம்.சிரியா, ஆஃப்கானிஸ்தான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடு களில் தாக்குதல் நடத்திவரும் ஐஎஸ் தீவிரவாதிகள், சமீப காலமாக பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளைக் குறிவைத்துவருகின்றனர். கடந்த மாதம் நடந்த மான்செஸ்டர் தாக்குதல்மூலம் அதிர்வலைகளைக் கிளப்பிய பயங்கரவாதிகள், தற்போது பிலிப்பைன்ஸ் தலைநகரை குறிவைத்துத் தாக்கியுள்ளனர். மணிலாவில் இருக்கும் காசினோ காம்ப்ளெக்ஸ் ஒன்றில் இந்த கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட் டிருக்கிறது. மணிலா நகரின் மிகப் பெரிய காசினோ ரிசார்ட்டில், அடையாளம் தெரியாத இரண்டு நபர் கள் திடீரென்று நுழைந்து, ஐஎஸ் இயக்கத்தின் பெயரை உச்சரித்துவிட்டு, கண்மூடித்தனமாக துப்பாக் கியால் சூட்டுள்ளனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் 36 பேர் பலியாகியுள்ளனர் என்றும், 54 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் உள்ளூர் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுவருகின்றன.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்