பாரீஸ் ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறுவதாக அதிபர் ட்ரம்ப் அறிவித்திருந்தார். ’இந்த முடிவு, நம் குழந்தைகளைத்தான் பாதிக்கும்’ என்று மார்க் சக்கர்பெர்க் தெரிவித்துள்ளார். 2015-ஆம் ஆண்டு, 196 நாடுகளின் பிரதிநிதிகள் பாரீஸில் சந்தித்து, இரவு பகலாக பருவநிலை மாற்றம்குறித்து விவாதித்து, ஓர் ஒப்பந்தத்தை வடிவமைத் தார்கள். அந்த ஒப்பந்தத்தின் நோக்கம், ஒவ்வொரு நாடும் கரியமில வாயு வெளியேற்றத்தை (Carbon Emmission) இயன்றளவு குறைப்பது. உலகத்திலேயே அதிகளவு கரியமில வாயுவை உமிழும் அமெரிக்கா நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பின், ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டது. ஆனால், தற்போது ’அமெரிக்கப் பொருளாதாரத்தைச் சீரழித்துவிடும்’ என ட்ரம்ப் ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க், ‘பாரீஸ் ஒப்பந்தத்திலிருந்து விலகுவதற்கான முடிவு, நம் சுற்றுச்சூழலையும் பொருளாதாரத்தையும் வருங்காலத்தில் நம் குழந்தைகளையுமே பாதிக்கும்’ எனத் தன் ட்விட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்துள்ளார். மேலும், ‘எங்கள் நிறுவனம் சார்பாக இனி புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என முடிவெடுத்துள்ளோம். உலகின் ஒட்டுமொத்த சமுதாயமாக நாம் அனைவரும் ஒன்றிணைந்து, பருவநிலை மாற்றத்திலிருந்து உலகைக் காப்பாற்றுவோம்’ என்றும் குறிப்பிட்டுள்ளார் மார்க் சக்கர்பெர்க்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்