பாலிவுட் நடிகை சன்னிலியோன், தன் டேனியல் வெபர் கணவர் மற்றும் நண்பர்கள் சிலருடன் வெளிநாடு செல்ல தனியார் விமானம் ஒன்றில் பய ணித்தார். அவர்கள் சென்ற தனியார் விமானம் மகாராஷ்டிரா அருகே நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது, தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு, திடீ ரென்று விமானம் நிலைகுலையத் தொடங்கியது. இதற்கு, மோசமான வானிலைதான் காரணம் என்று கூறப்படுகிறது. அனுபவம் வாய்ந்த விமானி என்பதால் சூழலைச் சமாளித்து, விபத்து ஏற்படாமல் விமானத்தைத் தரையிறக்கி, பயணிகளைக் காப்பாற்றியுள்ளார். நடந்த சம்பவம் குறித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் அதிர்ச்சியோடு வீடியோ வெளியிட்டுள்ளார், சன்னி லியோன். அதில், “நாங்கள் உயிரோடு இருப்பதற்கு கடவுளுக்கு நன்றி தெரிவிக்கிறோம். மோசமான வானிலை காரணமாக எங்களுடைய தனியார் விமானம் விபத்துக்குள்ளாகி இருக்கும். எப்படியோ தப்பித்து வீட்டுக்கு சென்று கொண்டிருக் கிறோம். எங்களுடைய விமானிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். எங்களுடைய வாழ்க்கை அவர்கள் கையில்தான் இருந்தது. எப்படியோ எங் களைக் காப்பாற்றிவிட்டார்கள்” என்று கூறியுள்ளார்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்