பெண் செய்தியாளருக்கு வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்த ஃப்ரான்ஸ் டென்னிஸ் வீரர் மேக்ஸிம் ஹாமு, ப்ரெஞ்சு ஓபன் தொடரிலிருந்து நீக்கப் பட்டுள்ளார். பாரிஸில் நடைபெற்று வரும் ப்ரெஞ்சு ஓபன் தொடரின் முதல் ஆட்டத்தில் பாப்லா ஸ்வாசிடம், மேக்ஸிம் ஹாமு தோல்வி அடைந்திருந்தார். அப்போது யூரோஸ்போர்ட் தொலைகாட்சி சார்பில் மாலி தாமஸ் என்ற பெண் நிருபர் ஒருவர் மேக்ஸிம் ஹாமுவிடம் நேரலையில் கேள்வி எழுப்பினார். அப்போது மேக்ஸிம் ஹாமு, அந்தப் பெண் நிருபரின் தோளில் கையைப் போட்டு இழுத்து அவருக்கு வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்தார். செய்தியாளர் அதைத் தவிர்த்து விட்டு மீண்டும் கேள்வி எழுப்பும் போது மேக்ஸிம் ஹாமு, மாலி தாமஸ்க்கு மீண்டும் வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்தார். அங்கிருந்து வெளியேற முயற்சி செய்த தாமஸின் கழுத்தை மேக்ஸிம் ஹாமு இறுக்கமாகப் பிடித்துக் கொண்டார். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது ஒழுங்கு நடவடிக்கையின் காரணமாக மேக்ஸிம் ஹாமு ப்ரெஞ்சு ஓபன் தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்