வெனிசுலா அதிபருக்கு எதிராக நடந்து வரும் போராட்டத்தில், இதுவரை 3000-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப் படுகிறது. வெனிசுலாவில், அதிபர் நிக்கோலஸ் மடுராவின் ஆட்சிக்கு எதிராக, கடந்த இரண்டு மாதங்களாக உள்நாட்டுக் கலவரங்கள் நடந்துவருகின்றன. இதில், பல அப்பாவிப் பொதுமக்கள் உயிரிழந்துவருகின்றனர். மடுரா பதவி விலக வேண்டும் எனவும் அதிபர் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, வெனிசுலாவில் தினமும் பதற்றமான சூழல் நிலவிவருகிறது. இரண்டு மாதப் போராட்டத்தில், 3,000-க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போராட்டத்தின்போது நடைபெறும் வன்முறைச் சம்பவங்களில், 60-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளதாகவும் போராட்டக்காரர்களின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிபர் நிக்கோலஸ் மடுரா ஒரு சர்வாதிகாரிபோல ஆட்சிசெய்துவருவதாக எதிர்க் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்