பிலிப்பைன்ஸ் நாட்டின் மரவி நகரத்தில், தீவிரவாதிகளுக்கு வைத்த குறி தப்பியதால், ராணுவ வீரர்கள் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மரவி நகரில் ராணுவ வீரர்களுக்கும் ஐஎஸ்ஐஎல்(ISIL) தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே போர் நடந்துவருகிறது. மரவியின் தெற்குப் பகுதி, தீவிரவாதிகளின் பிடியில் உள்ளது. அதனை மீட்க, இன்று காலை தீவிரவாதிகள் தங்கி இருக்கும் பகுதியைக் குறிவைத்து, ராணுவத்தினர் வான் வழித் தாக்குதல் நடத்தினர். குறி தப்பியதால், அருகில் இருந்த ராணுவ முகாம் மீது தாக்கப்பட்டுவிட்டது. இதனால், 10 ராணுவ வீரர்கள் பரிதாபமாகப் பலியாகிவிட்டனர். இந்தச் சம்பவம்குறித்து பிலிப்பைன்ஸ் பாதுகாப்பு அமைச்சர் டெல்பின் லாரென்சனா கூறுகையில், ‘மரவியின் தெற்குப் பகுதி, தீவிரவாதிகளின் பிடியில் உள்ளது. சுமார் 2,000 பேர் அங்கு சிக்கியுள்ளனர். அந்தப் பகுதியைத் தீவிரவாதிகளிடம் இருந்து மீட்க தொடர்ந்து வான்வழியாகவும் நில வழியாகவும் தாக்குதல் நடத்திவருகிறோம். அவ்வாறு தாக்குதல் நடத்தும்போது, சில சமயங்களில் ஒருங்கிணைப்பு இல்லாமல் தவறு நிகழ்வது சகஜம். அப்படித்தான் இன்று வான்வழித் தாக்குதலில் குறி தவறிவிட்டது’ என்று தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, பிலிப்பைன்ஸ் ராணுவத்துக்கும் பாதுகாப்பு அமைச்சருக்கும் அங்குள்ள மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள் கண்டனம் தெரிவித் துள்ளனர்.
வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் முன்பே முஷரப் இறந்துவிட்டால், அவரது
மேலும்Facebook Twitter Mail Text Size Printஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவி நீக்க கோரும்
மேலும்