உலக நாடுகளுக்கு அச்சுறுத்தல் அளிக்கும் வகையில் தொடர் ஏவுகணைச் சோதனையில் ஈடுபட்டுவரும் வட கொரியாவுக்கு, தக்க பதிலடி தரும் வகை யில், பாதுகாப்பு ஏவுகணைச் சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளது அமெரிக்கா. வட கொரியாவின் ஏவுகணைப் பரிசோதனைகள் தொடர்ந்த வண்ணம் இருப்பது தென்கொரியா, ஜப்பான் போன்ற அண்டை நாடுகளை அச்சுறுத் தியுள்ளது. ஐ.நா சபை உள்ளிட்ட பல நாடுகளும் எதிர்ப்புத் தெரிவித்துவந்தன. இந்நிலையில், அமெரிக்கா புதிய ஏவுகணைச் சோதனை ஒன்றை நிகழ்த் தியுள்ளது. ஏவப்படும் ஏவுகணைகளை இடைமறித்துத் தாக்கக்கூடிய, புதிய ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்துள்ளது அமெரிக்கா. அமெரிக்காவின் இந்தப் புதிய ஏவுகணைச் சோதனை, கலிஃபோர்னியா மாகாணத்தில் நிகழ்த்தப்பட்டது. பசிபிக் பெருங்கடலுக்கு அருகிலுள்ள ஒரு தீவி லிருந்து ஏவப்பட்ட தாக்குதல் ஏவுகணை மாதிரியை, அமெரிக்காவின் பாதுகாப்பு ஏவுகணை மறித்துத் தாக்கி அழித்தது. இதை, அமெரிக்காவின் பாதுகாப் புத் தலைமையகம், ‘பென்டகன்’ உறுதிப்படுத்தியுள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் வட கொரியா தொடர்ச்சியாக ஒன்பது ஏவுகணைச் சோதனைகளை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்