ஈராக்கில், இரு இடங்களில் நிகழ்ந்த வெடிகுண்டுத் தாக்குதலில், அப்பாவி மக்கள் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஈராக் தலைநகர் பாக்தாத்தில், ரமலான் நோன்பு கழிக்,க ஐஸ்கிரீம் கடைக்கு சில இஸ்லாமியக் குடும்பங்கள் சென்றுள்ளன. அப்போது, அங்கு சக்தி வாய்ந்த குண்டு வெடித்துள்ளது. அதில், 17 பேர் பலியாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஐஸ்கிரீம் கடைக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த காரில் வெடி குண்டு வைக்கப்பட்டு, ரிமோட் மூலம் வெடிக்கச் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குண்டுவெடிப்புச் சம்பவத்துக்கு, ஐஎஸ் அமைப்பினர் பொறுப்பேற்றுள்ளனர். இதனிடையே, ஈராக்கில் கரடா மாவட்டத்தில் நிகழ்ந்த மற்றொரு வெடிகுண்டுத் தாக்குதலில், 14 பேர் பலியாகியுள்ளனர். அதில், 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ரமலான் பண்டிகைக் காலம் தொடங்கும் இந்த வேளையில், ஈராக்கில் தொடர் தாக்குதல் நிகழ்த்தப்படுவது, அந்தப் பகுதி மக்களிடத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு ரமலான் பண்டிகையின்போது ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண் டுத் தாக்குதலில், 300-க்கும் மேற்பட்டோர் பலியானது குறிப்பிடத்தக்கது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்