மான்செஸ்டர் வெடிகுண்டுத் தாக்குதலில் பாதிப்படைந்தோருக்கு நிதி திரட்ட, இசைக் கச்சேரி ஒன்று நடைபெற உள்ளது.கடந்த 22ஆம் தேதி, இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் பகுதியில், அமெரிக்க பாப் பாடகி அரினா கிராண்டியின் இசைக் கச்சேரியில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இந்த வெடிகுண்டுத் தாக்குதலில் 22 பேர் பலியாகினர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றது. மேலும், உலகம் முழுவதிலும் கடுமையான எதிர்ப்புக் கிளம்பியது. இந்நிலையில், வெடிகுண்டுத் தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு நிதி திரட்ட, இசைக் கச்சேரி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. பிரபல பாப் இசைக் கலை ஞர்கள் ஜஸ்டின் பீபர், கேட்டி பெர்ரி, மைலி சைரஸ் உள்ளிட்டோர் கலந்துகொள்ளும் இந்த இசைக் கச்சேரியில், அரினா கிராண்டியும் கலந்துகொள்கிறார். இங்கிலாந்து நாட்டில் உள்ள ஓல்டு ட்ரஃபோர்டு மைதானத்தில் இந்த இசைக் கச்சேரி நடைபெற உள்ளது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்