மாராவி: பிலிப்பைன்சில் மாராவி நகரில் தீவிரவாதிகளுக்கும், ராணுவத்தினருக்கும் பயங்கர சண்டை நடைபெற்று வருகிறது. அந்த நகரில் சுமார் 2,000 பொதுமக்கள் சிக்கியுள்ளதாக மாகாண நெருக்கடி நிர்வாகம் தெரிவித்துள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் மிண்ட்னோரா தீவு உள்ளது. இந்த தீவில் உள்ள மாராவி நகரில் முஸ்லிம் மதத்தினர் அதிகம் வாழ்கின்றனர். அந்த பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வரும் மாவ்ட்டே போன்ற தீவிரவாத குழுக்கள் அங்கு இஸ்லாமிய அரசு அமைக்க தீவிரமாக போராடி வருகின்றனர். இந்த தீவிரவாத அமைப்புகள் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் ஆதரவுடன் பல்வேறு தீவிரவாத நடவடிக்கைகளை அந்த பகுதியில் அரங்கேற்றி வருகின் றனர். இந்த நிலையில், பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுட்டெர்ட்டே தீவிரவாதிகளை ஒடுக்குவதற்காக அங்கு ராணுவ ஆட்சியை கடந்த செவ் வாய்க்கிழமையன்று அமல்படுத்தினார். இதனையடுத்து, மாராவி நகரை ராணுவத்தினர் சுற்றி வளைத்தனர். இதனை தொடர்ந்து தீவிரவாதிகளுக்கும், ராணுவத்தினருக்கும் கடும் சண்டை நடை பெற்று வருகிறது. கடந்த ஒரு வாரமாக நடைபெற்று இந்த சண்டையில் சுமார் 100 பேர் உயிர் இழந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. சண்டை கார ணமாக அந்த நகரில் வசித்து வந்த 2 லட்சம் பேரில் பெரும்பான்மையான மக்கள் அங்கிருந்து வெளியேறி விட்டனர். இருப்பினும், தீவிரவாதிகளின் கட் டுப்பாட்டு பகுதியில் 2 ஆயிரம் மக்கள் சிக்கியுள்ளனர். அவர்கள் தங்களை மீட்கும்படி அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஆனால், அந்த பகுதிக்குள் அரசு நிர்வாகத்தால் எளிதாக செல்ல முடியாத அளவுக்கு நிலைமை உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்