பெய்ரூட்: சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகள் அதிகமுள்ள ராக்கா நகரில் நேற்று நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் 17 பேர் உயிரிழந்தனர். சிரியா நாட்டில் கடந்த 2014ம் ஆண்டு முதல் அமெரிக்கா தலைமையிலான கூட்டு படைக்கும், ஐஎஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே மோதல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஐஎஸ் தீவிரவாதிகளின் தலைநகரான ராக்கா நகர் அருகேயுள்ள ராட்லா மற்றும் கஷ்ரத் கிராமங்கள் இடையே நேற்று அமெரிக்க கூட்டுப்படை அதிரடியாக வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் அந்த பகுதியில் சென்று கொண்டிருந்த பஸ்கள் மீது குண்டுகள் வீசப்பட்டது. இதில் அந்த பஸ்களில் சென்ற பொதுமக்கள் 17 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக பிரிட்டனை சேர்ந்த மனித உரிமை கண்காணிப்பு குழு கூறுகையில் வான்வழி தாக்குதலில் 18 பேர் கொல்லப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது. இறந்தவர்கள் பற்றிய விவரம் உடனடியாக தெரியவில்லை.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்