புரூக்ஹெவன் அமெரிக்காவில் மிசிசிபி மாகாணத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் நகர துணை தலைவர் உள்பட 8 பேர் கொல்லப்பட்டனர். சந்தேகக்குரிய குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். அமெரிக்காவின் மிசிசிபி மாகாணம் லின்கான் பகுதியில் உள்ள கிராமத்தில் தனது குழந்தைகளை பார்ப்பதற்காக கோரி காட்போல்ட் (35 வயது) வந்துள்ளார். அப்போது அவருக்கும், அவரது மனைவிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனையடுத்து பக்கத்து வீட்டுக்காரர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இது குறித்து தகவல் அறிந்த நகர துணை தலைவர் அங்கு வந்து நிலவரத்தை சரி செய்ய முயன்றுள்ளார். ஆனால், கோரி காட்போல்ட் கோபத்தில் அங்கிருந்தவர்களை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில், நகர துணை தலைவர் உள்பட 8 பேர் கொல்லப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் கோரி காட்போல்ட்டை கைது செய்தனர்.
நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ்
மேலும்இங்கிலாந்தின் ராணியாக சுமார் 70 ஆண்டு காலம் ஆட்சி புரிந்த, இரண்டாவது
மேலும்வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்
மேலும்இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எந்த விதத்திலும் தொடர்பில்லை
மேலும்16 ஆயிரம் வீரர்களுடன் முதன்முதலாக அமெரிக்காவில் விண்வெளி படை
மேலும்